கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி முகாவில் பகுதியில், வீடு ஒன்றில், தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை, அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலத்தை அவதானித்த உறவினர்கள், பளை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பளை பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட நீதவானுக்கு தகவல் வழங்கினர்.
இதில், முகாவில் இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த, 19 வயதுடைய சந்திரகுமார் தமிழரசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.