தெற்கு அதிவேக வீதியின் மில்லெனிய மற்றும் தொடங்கொடை பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 39 வயதுடைய தந்தை மற்றும் 4 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நோக்கி வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.