திருகோணமலை – தோப்பூர் பகுதியில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.

தோப்பூர் பிரதான வீதியின் புனரமைப்பு பணி இடம்பெறும் நிலையில் இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்