சன் டிவியில் தொகுப்பாளராகவும், நடிகையுமாக பிரபலமான நக்ஷத்ரா. சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முன்னதாக விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நக்ஷத்ரா சில மாதங்களுக்கு முன் ராகவ் என்பவரை காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தனது திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.