தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் பிரவீனா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மற்ற சின்னத்திரை நடிகர்களைப் போலவே இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த சில மாதங்களாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் நான் பின்தொடரும் நபர்களுக்கு தவறான புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர். நான் அவர்களை பிளாக் செய்ய முயற்சித்தேன். மேலும் அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தேன். ஆனால் அவர்கள் நிறுத்துவதாக இல்லை.

இதன் காரணமாக நான் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன். தற்போது குற்றவாளிகள் பிடிபட்டுவிட்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். எனக்கு உதவிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். தில்லி வரை சென்று குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினருக்கு மிக்க நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.