அபுதாபி ரி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நடுவர் ஒருவருக்கு நடந்த சம்பவமொன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

நார்தர்ன் வாரியர்ஸ் மற்றும் சென்னை பிரேவ்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் நடுவராக கடமையாற்றிய அலீம் தார் இந்த இக்கட்டான சூழலை எதிர்கொண்டார்.

களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் வீசிய பந்து நடுவரின் தலையை பதம் பார்த்தது.

எனினும், அப்போது அவருக்குப் பின்னால் களத்தடுப்பில் இருந்த இலங்கை அணித்தலைவர் தசுன் சானகா, பந்து வருவதை சமிக்ஞை செய்த போதும் நடுவரால் தப்ப முடியவில்லை.

இதையடுத்து நடுவர் அருகில் வந்த ஏஞ்சலோ பெரேரா பந்து பட்ட இடத்தை இவ்வாறு மசாஜ் செய்திருந்தார்.