ஹாவேரி மாவட்டம் ஷிகாவி தாலுகாவில் உள்ள லேட் கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நாகப்பாம்பு ஒன்று செங்கல் சூளையில் பதுங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. இதை கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பின்புறம் பதுங்கியிருந்த நாகப்பாம்பை ராஜு கவுரி என்பவர் பிடிக்க முயர்ச்சித்தார். அப்போது அந்த நாகப்பாம்பு ராஜு கவுரியை தாக்கியது. பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட ராஜூ கவுரியை ஹூப்ளியில் உள்ள கெப்பி மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். தற்போது ராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜு பாம்பு கடித்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த சம்பத்தை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.