நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுப்பெறுகிறது.

குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் நிறைவுப் பெறகிறது.

எதிர்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில சில முக்கிய சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டமூலம், தேர்தல் திருத்த சட்டமூலம், பிறப்பு,இறப்பு திகதியை இதர ஆவணங்களுடன் இணைக்கும் சட்டமூலம் உள்ளிட்ட சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன