டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

குறித்த கூட்டத்தில், நாளை முதல் டிசம்பர் 23 ஆம்  திகதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சிறந்த முறையில் நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேவேளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கடந்த  வருடம் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யும் மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும் கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது