அரசாங்கத்தின் முகாமைத்துவம் அற்ற நிலையே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஸ்கெலியா – நோட்டன் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.