சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினம், வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஆறுமுகநாவலரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றன.

கருமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ நா.பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந்தணர்கள் மற்றும் தமிழ்மணி அகளங்கன்,  இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வரசர்மா, விரிவுரையாளர் அருந்ததி ரவீந்திரன் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இன்று, மாவீரர் தினம் என்பதனால் ஆலயத்திற்கு வெளியில் பெருமளவான புலனாய்வு பிரிவினர் குழுமியிருந்ததுடன், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.