கேழ்வரகு அவலை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  

இது நீரிழிவு நோயாளிகளுக்கு அருமையான உணவு.

தேவையான பொருட்கள்

  1. கேழ்வரகு அவல் – ஒரு கப்
  2. வெங்காயம் – ஒன்று
  3. கடுகு – அரை டீஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் – 2
  6. பெருங்காயத்தூள் – சிறிதளவு
  7. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  8. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  9. எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு

செய்முறை

கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.

வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.

அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி