சில நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் மீண்டும் திறக்கப்பட்டன.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 2,400 கன அடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளதுடன் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வினால் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்தேக்கங்களுக்கு அருகில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.