நுவரெலியா – உடபுசல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(23) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், நுவரெலியா ருவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உந்துருளி விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

இதன்போது அவ்வீதி வழியாக வந்த தாங்கி ஊர்தி, வீதியில் விழுந்து கிடந்த நபர்மீது ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.