அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.