பதுளை – ஒலியமனடிய பிரதேசத்தில் பித்தளை பூச்சாடி மற்றும் கதிரையால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.