திருமண மண்டபம் தீப்பிடித்து எரிந்த போதும் இருவர் மட்டும் உணவை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

https://twitter.com/i/status/1465128487707025409

இந்த சம்பவம் மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியில் நடைபெற்றுள்ளது.

சாப்பிட்டு கொண்டிருந்த நபர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும், சத்தத்தை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு வருகின்றனர்.

திரும்பி நாற்காலிகளில் அமர்ந்து நெருப்பைப் பார்க்கிறார்கள் தொடர்ந்து சாப்பிடுகின்றார்கள். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.