பம்பலப்பிட்டி, ஸ்கூல் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் பகுதியில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குறித்த எரிவாயு நிறுவனம் தங்களது அடுப்பையும் எரிவாயு சிலிண்டர் மற்றும் அதன் ரெகுலேட்டர் ஆகியவற்றை சோதனை செய்ததாகவும், வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென குறிப்பிட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் எரிவாயு அடுப்புக்கு அருகில் இருந்த பொருட்கள் சிலவற்றுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டதோடு, வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் பாதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது