இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நாளானது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட நாளானது பாகிஸ்தானுக்கு அவமானகரமானது.

இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.