கொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் ஏற்கனவே கண்டித்துள்ளோம்.

இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் செயற்பட்ட விதம் சிறப்பு. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆனால் கொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை கண்டிக்கின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்