பாதுகாப்பற்ற எரிவாயுக் கொள்கலன்கள் திரும்ப பெறாமல் வீடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிக்கக் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் 3 முதல் 4 இலட்சம் வரை காணப்படுவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க தெரிவித்தார்.

அவற்றை பாதுகாப்பான முறையில் திரும்ப பெறுவதற்கு எரிவாயு நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.