பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பாலுடன் மஞ்சள் கலந்து பருகினால் என்னென்ன நன்மைகள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

  • மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் அது சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகின்றது.
  • மஞ்சல் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
  • தினமும் மஞ்சள் பால் எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. மஞ்சளுக்குப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சக்தி உண்டு. மஞ்சள் பாலில் சிறிதளவு மிளகு பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மஞ்சள் பால் அருமருந்தாகும். இது கீல்வாத, முடக்குவாதப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது.
  • மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
  • மஞ்சள் கலந்த பாலை தினமும் குடித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
  • மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்றி வலியைக் குறைக்கவும் மஞ்சள் பால் உதவுகின்றது. கர்ப்பிணிகளும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
  • உடலில் எலும்புகள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்க மஞ்சள் பால் உதவுகின்றது. இதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதுடன், ஹார்மோன் பிரச்சினையையும் இது சரி செய்கின்றது.