மற்றொரு அறுவை சிகிச்சை காரணமாகப் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் மார்ச் மாதம் வரை விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழங்கை காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டமை காரணமாக இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய ஆர்ச்சர், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல்.போட்டியிலிருந்தும் விலகியிருந்த ஆர்ச்சர், காயத்திலிருந்து மீண்டு, சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார்.

பின்னர் முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியிருந்த அவருக்கு கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.