பிரித்தானியாவில் சில காலம் வாழ்ந்துவிட்டு இலங்கை திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதையடுத்து, அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

67 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான இவர், பிரித்தானியாவில் சில காலமாக வசித்து வந்ததுடன், மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து தமது சொத்துக்களைக் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (27) இரவு 7.20 மணியளவில் குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் அறிந்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.