திருகோணமலையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா – கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.