புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயணித்த குறித்த நபர், தரித்திருந்த டிப்பர் வாகனத்தை கடந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.