வனவாசலைப் பகுதியில் உள்ள புகையிரத கடவை ஒன்றில் மோட்டார் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இன்று (01) மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து மோட்டார் வாகனம் தீப்பிடித்து எரிந்ததுடன் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி புகையிரத்ததுடன் இவ்வாறு மோட்டார் வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதத்தில் மோதிய மோட்டார் வாகனம், சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று தீப்பிடித்தது.

புகையிரதத்தின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இணைந்து அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.