யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் புகையிரதத்துடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், வாகன சாரதி உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற குறித்த விபத்தில், மிருசுவில் பகுதியை சேர்ந்த எஸ். பிரதீப் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்று கொண்டிருந்த புகையிரதத்துடனேயே வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது