புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அறிவு மற்றும் தரவுகளுடன் விடயங்களைத் தீர்மானிக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது. மாற்றமடையும் உலகிற்கேற்ப கல்வி முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மக்களை ஜீவனோபாய ரீதியில் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும். என்றார்.