குருணாகல், உடவல்பொல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்யை தினம் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவார்.

கைதான சந்தேக நபர்கள் குருணாகல் மற்றும் ஹட்டன பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

அவர்கள் இன்று குருணாகல் நிதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.