நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் விஜய்யின் கடைசி நாள் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.