பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் புனித யாத்திரையாக திருப்பதிக்கு விஜயம் செய்துள்ளார்.

திருப்பதி விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்த பிரதமரை துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில், வாகனத்தின் ஊடாக திருப்பதி செல்லவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை வெள்ளிக்கிழமை குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்தாண்டு பெப்ரவரி மாதம் திருப்பதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.