இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் அமைக்கப்படவுள்ள புதிய எரிவாயு நிறுவனம் விரைவில் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென பெற்றோலியக் கூட்டுத்தாபன ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இது தற்போது நிலவும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்பரப்பில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள மற்றைய கப்பலின் வாயு கலவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நேற்று (15) தெரிவிக்கப்பட்டது.

கப்பலில் இருந்த எரிவாயு, முன்னர் தரமற்ற எரிவாயு கொண்டு வந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கப்பலின் எரிவாயு மாதிரிகளும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.