பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பான, முரண்பாடற்ற வகையிலான இறுதி தீர்மானம், எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என, போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீட்டுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், பேருந்து கட்டணத்தை, 20 சத வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதனால், பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கும், தனியார் பேருந்து சங்க உரிமையாளர்களுக்கும் இடையில், இன்று, கொழும்பில் உள்ள போக்குவரத்து அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது, எதிர்வரும் வாரம், இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.