மட்டக்குளி காவற்துறை பிரிவிற்குட்பட்ட பொக்குனுவத்த பிரதேசத்தில் நேற்று (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் மட்டக்குளி, பள்ளிய வீதியை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வேறொரு குழுவினருடன் மதுபான விருந்து நடத்தியுள்ளதாகவும், விருந்தின் இறுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.