பொடி மெனிக்கே புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பம் இன்று (15) திகதி மதியம் கொட்டகலைக்கும் தலவாக்கலைக்கும் இடையில் சென்கிளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (15) காலை புறப்பட்டு வந்த புகையிரதத்திலே குறித்த நபர் மோதுண்டுள்ளதாகவும், இவரது சடலத்தை கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைத்து விட்டு புகையிரதம் புறப்பட்டு சென்றதாகவும் புகையிரத நிலைய உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சாந்த என்ரூ தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரென பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் நிகழ்ந்துள்ளதா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.