பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவுக்கு எதிரான வழக்கு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதன்படி குறித்த நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் புத்திக சி.ராகல உத்தரவிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்