தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு தற்சமயம் எதிரணி மட்டத்திலே இடம்பெறுவதாகவும் அதில் ஆளும் கட்சியின் எந்த கட்சிகள் அங்கம் வகித்தாலும் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் இந்த கூட்டு கட்சிகளின் சந்திப்பில் பங்கேற்க தயாராகவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் இது தொடர்பில் வினவப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த அவர், பொதுவான செயற்பாடுகளுக்காக எந்த கட்சிகள் ஆதரவு வெளியிட்டாலும் அதனை வரவேற்பதாக குறிப்பிட்டார்.