பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து குறித்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.

குறித்த செயலியைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் தகவல் வழங்க முடியும்.

இதேவேளை, எதிர்காலத்தில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.