அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று(24) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கமைய ஆயர்வேத சுகாதார சேவையாளர்கள் இன்று முற்பகல் 10 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத திணைக்களத்திற்கு முன்பாகவும், பிற்பகல் 3 மணிக்கு சுகாதார அமைச்சிற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பி.டீ.என்.எஸ்.ஜே.பண்டார தெரிவித்துள்ளார்.