தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியை பாய்ச்சும். உங்களை சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ´டோர்ச்´ (மின்சூளம்) சின்னம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று ´பெட்டரிகளும்´ இயங்கு நிலையில் இருந்தால்தான் மின்சூளத்தால் பிரகாசமாக ஒளியை பாய்ச்ச முடியும். அதேபோல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்குமிடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. 6 வருடங்களாக கூட்டணியாக பயணிக்கின்றோம். இனி மின்சூளம் ஏந்தி வருவோம். மக்களை சூழ்ந்துள்ள இருளை அகற்றி, ஒளியை பாய்ச்சும் விதத்தில் எமது பயணம் தொடரும் என்றார்