மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வேலைக்காரியால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தயாவதியான எனது அம்மாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தயாவதியின் மகள் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு உயிரிழந்த தயாவதியின் கணவர் மற்றும் மகள் நேற்று திங்கட்கிழமை (27) நீதிமன்றத்தில் வாக்கு மூலம் பதிவு செய்ய சென்று திரும்பியபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
நான் எல்லா பட்டங்களும் அம்மாவுக்கு சேரவேண்டும் என படித்தேன் ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்த சம்பவம் ஊடகம் ஊடாக வெளிவந்தது எனவே நீதி கிடைக்கும் என நம்புகின்றோம். இது ஒரு படிப்பினை எனவே அப்படியான சம்பவங்களை ஆறவிடாமல் அந்த இடத்திலேயே தண்டனை வழங்கினால் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் செய்யப் போறவனுக்கும் ஒரு பயம் வரும் அப்போது ஒன்றும் செய்யக் கூடாது என்று பயத்தல் இருப்பான்.
எனவே வெட்டி இருக்கிறால் அவளே ஒத்துக் கொண்ட பின்னர் அந்த இடத்திலே தண்டனையை வழங்குங்கள் அப்போது தான் நியாயம் கிடைக்கும் தாய் இல்லாமல் ஒரே ஒரு பெண்பிள்ளை படும் வேதனை ஒருவருக்கும் விளங்காது. நான் உயிருடன் இருப்பது அப்பாவுக்காக அதேவேளை பல்கலைக்கழகத்துக்கு படிக்கபோக முடியாது உள்ளது என்ன நடக்கும் என்று பயம் ஏற்பட்டுள்ளது என்பதால். போகமுடியாமல் உள்ளதாக தயாவதியின் மகள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.