பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போரில் இந்தியா வெற்றிப் பெற்றிருந்தது. இதன் பொன்விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பாகிஸ்தானுடனான நேரடிப் போரில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதேபோல் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என உறுதியளிக்கிறேன்.

வரலாற்றில் இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவியவர்களின் பெயர்களையே தங்களது ஏவுகணைகளுக்கு பாகிஸ்தான் சூட்டி வருகிறது. இது இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கை அந்நாடு தீவிரமாக வளர்த்து வருவதை வெளிக்காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.