பூண்டுலோயா – நியங்கந்தர பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்திலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, ஆடைத்தொழிற்சாலையின் பின்புறத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைதான பெண் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்