மஸ்கெலியா பிரதேச சபை அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அதன் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற மஸ்கெலியா பிரதேச சபை அமர்வின்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் கட்டடங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், உப தவிசாளர் பெரியசாமி பிரதீபனை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த உப தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இன்று(16) இருவரை கைது செய்துள்ளனர்.