சிவனொளிபாதமலை – ஹட்டன் பிரதான வீதியில் எலகனுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்ததில் உணவகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் உணவு தயாரித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் இரத்தினபுரி – படதொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நபரின் உடல்நிலை தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.