இந்திய மாநிலங்களவையில் தொடர் குழப்பத்தை எழுப்பிவந்த, 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் இன்று வேளாண் சட்ட இரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 எம்.பிக்களை மாநிலங்களவைத் தலைவர் இடைநீக்கம் செய்துள்ளார்.

இதற்கமைய இளமாறம் கரீம், பூலா தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், பினோய் விஸ்வம், தோலா சென் ரூஷாந்தா சேத்ரி, பிரியங்கா சதுர்வேதி ரூஅனில் தேசாய் ஆகியோர் தமது உறுப்பினர் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.