இன்று காலை நந்திக்கடல் பகுதிக்கு சென்ற ரவிகரன் மாவீரக்காகவும் ,யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்காகவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்தோடு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்தி வழிபாடுகளிளும் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மாவீர் தினமாகிய இன்று இலங்கை முழுவதும் இராணுவமும் பொலிஸும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.