விமானத்தில் மாஸ்க் போடவில்லை என 80 வயது முதியவரை இளம் பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகரித்துகொண்டிருக்கும் நேரத்தில் முககவசம் அணிவதை மக்கள் கட்டாயமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் 80 வயது முதியவர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

உணவு அருந்துவதற்காக வேண்டி, முகக்கவசத்தை கழற்றி, உணவு அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, விமானத்தில் இருந்த பெண் ஒருவர் அந்த முதியவரிடம் முகக்கவசத்தை அணியுங்கள் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அந்த முதியவரும், நீ முதலில் அமைதியாக பேசு எனக்கூற, சக பயணிகளும் பெண்ணை தனது இருக்கையில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.

ஆனால், அதனைக் கண்டு கொள்ளாத பெண்மணி, கோபத்தில் முதியவரின் முகத்தில் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அடிதடியில் ஈடுபட்ட அந்த பெண்மணியை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கிருந்தவர்களின் வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், போலீஸ் அதிகாரிகள், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.