நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை மின்வெட்டு நீடிக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு சில பிரதேசங்களில் அவ்வப்போது மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது அதனைத்து துணை மின் நிலையங்களின் ஊடாகவும் 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று (03) மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கை என சந்தேகிப்பதாகவும், விசாரணைகள் நடத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்தார். தற்போது பொறியியலாளர்கள் மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.